முன்னணி நடிகைகளைப் போல் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்ட வித்யூலேகா.! என்ன மறுபடியும் உடல் எடையை ஏற்றி விட்டாரோ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் குணச்சித்திர வேடத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்யூலேகா ராமன் இவர் தமிழில் முதன்முதலாக  2012ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் ஓரளவு கவரப்பட்டது.

அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பும் கிடைத்தது நீதானே பொன்வசந்தம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார் அதனை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் வித்யுலேகா பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்தவகையில் ஜில்லா, மாலினி 22 பாளையம்கோட்டை, வீரம், காக்கி சட்டை, மாஸ் இனிமே இப்படிதான், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, புலி, வேதாளம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் வித்யுலேகா உடல் எடை அதிகரித்து கொஞ்சம் குண்டாக இருந்ததால் இவரை பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள் அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்காக ஜிம் ஒர்க் அவுட் செய்து அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் உடல் எடையை குறைத்த  புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டார். அந்த வகையில் தற்பொழுது  டாப் ஆங்கிள் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மறுபடியும் குண்டாக மாறி விட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் வித்யுலேகா ராமன் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார் அவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

vidyu lekha
vidyu lekha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment