சினிமா உலகில் பெரும்பாலும் கொழுக் மொழுக் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலும் பின்னாட்களில் பட வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போவது உண்டு அத்தகைய நடிகைகள் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பட வாய்ப்பிற்காக தட்டுத்தடுமாறி வருகின்றனர் ஆனால் குணச்சித்திர வேடங்களில் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யூலேகா ராமன்.
இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் தனது கொழுக் மொழுக் உடலமைப்பை வைத்துக்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் கௌதம்மேனன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் அந்த வகையில் தீயா வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், வீரம், ஜில்லாபோன்ற படங்களில் நடித்தார் .
தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகைகளுக்கு பெயர் போனவராக திகழ்ந்து வருகிறார் மேலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் கொழுக் மொழுக் நடிகை வித்யூலேகா ராமன்.தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள வித்யூலேகா ராமன் வீட்டில் போரடிக்காமல் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் திடீரென உடல் எடையை சற்று குறைத்து இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள் புசுபுசுவென இருந்த வித்யூலேகா ராமனா இப்படி ஆகிவிட்டார் என்று ஆச்சரியப்பட்டு புகைப்படத்தை உற்று நோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
