இப்பவே பார்த்துக்கொள்ளுங்கள் அப்புறமா டெலிட் செய்து விடுவேன்.! வித்யூ ராமன் வெளியிட்ட புகைப்படம்.! வேண்டாம்.. வேண்டாம்.. என்று கதறும் ரசிகர்கள்.

தமிழ்சினிமாவில் அண்மைகாலமாக வாரிசு நடிகைகள் மற்றும் நடிகர்கள் தலை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள், அந்தவகையில் நடிகை வித்யூ ராமனும் ஒருவர், தமிழ் சினிமாவில் வித்யூ ராமன்  நீதானே என் பொன்வசந்தம், வீரம், விஎஸ்ஓபி, ஜில்லா, மாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

இவர் பொதுவாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தான் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் மோகன் ராமின் மகளாவார். தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த வித்யூ ராமன் கடைசியாக தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு பஞ்சுமிட்டாய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனாலும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார், கடந்த வருடத்தில் மட்டும் இவர் ஆறு தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் இவர் நடிக்க வந்த ஆரம்பித்திலேயே குண்டாக தான் இருந்தார் அதனால் இவரை பலரும் கிண்டல் செய்து வந்தார்கள்.

இந்தநிலையில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டார், தனது விடா முயற்சியால் தற்போது முன்பைவிட உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் வித்யூ ராமன், இவரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டினார்கள், இந்நிலையில் வித்யூ ராமன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நான் மிகவும் தீயாக உணருகிறேன் பின்னர் டெலிட் செய்து விடுவேன் என கூறியுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் பலரும் டெலிட் செய்ய வேண்டாம், தயவு செய்து டெலிட் செய்து விடாதீர்கள், என புலம்புகிறார்கள் ரசிகர்கள், சமீபத்தில் வித்யூ ராமன் கவர்ச்சி ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார் அந்த புகைப்படம் பாராட்டுகளும் விமர்சனங்களும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

vdhyuraman
vdhyuraman

Leave a Comment