ஷெரினி திரைப்படத்தில் வனத்துறை அதிகாரியாக மிரட்டும் வித்யா பாலன்.! வெளிவந்த ட்ரைலர் இதோ.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் வித்யாபாலன் இவரது நடிப்பில் தற்பொழுது புதிதாக ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது அந்த திரைப்படம் தான் ஷெர்னி நியூட்டன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அமித் மசூர்க்கர் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசர் போன்ற பலதும் மக்கள் மத்தியில் நன்றாக பிரபலமடைந்து விட்டது மேலும் பெண் வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் இதில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் ஆனால் தற்பொழுது அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

அதாவது வனத்துறை அதிகாரியாக வித்தியாபாலன் நடித்துள்ளது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த நிலையில் ஜூன் 18ஆம் தேதி இந்த மாதம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலரில் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் பலரும் ஒரே குஷியாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த ட்ரெய்லரில் வித்யா பாலன் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது  படத்தில் இவரது நடிப்பு மிகவும் பயங்கரமாக இருக்கும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள்.

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் வித்யா பாலனை பற்றி தங்களது கருத்துக்களை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள் அதில் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு வேணும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment