விடுதலை படத்தின் ஒட்டு மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? வியந்த ரசிகர்கள்

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக உருவான திரைப்படம் விடுதலை. இந்த படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிடப் படக்குழு முடிவு செய்தது அதன்படி முதல் பாகம் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக வெளியானது.

படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தள்ள தெளிவாக காட்டி இருந்தனர் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருந்தது மேலும் படத்தில் விஜய் சேதுபதி, சூரி உடன் இணைந்து பவானி ஸ்ரீ, ராஜூமேனன், சேதன், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர், சரவண சுப்பையா.

இளவரசு, ரமேஷ் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் சூப்பராக நடித்து அசத்தி இருந்தனர். விடுதலை படம் வெளிவந்து அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது அதோட மட்டுமல்லாமல் OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.

முதல் பாகத்திலேயே போட்ட காசைக்கு மேல் லாபம் எடுத்துள்ளதால் இரண்டாவது பாகம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் படகுழு இப்பொழுதே சந்தோஷத்தில் இருக்கிறது.  இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் படும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment