மாஸாக மார்ச் 8ஆம் தேதி இசைவேளியீட்டு விழாவை நடத்தும் விடுதலை.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சூரியும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து உள்ளனர் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இந்த திரைப்படம் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. தற்போது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இளையராஜா இசையில் தனுஷ் குரலில் வெளியான உன்னோடு நடந்தா பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து விடுதலை படத்தின் முதல் பாகம் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மார்ச் 8ஆம் தேதி நடக்க இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தற்போது அறிவித்திருக்கிறார். மேலும் விரைவில் திரையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக காமெடி நடிகராக ஜொலித்த சூரி அவர்கள் முதன் முறையாக வாடிவாசல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து சூரி அவர்கள் இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் சூரி அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment