விடுதலை பட நடிகையா இது.! ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது, அந்த அளவு மனதை வருடும் பாடல்களுக்கு இசையமைத்து வருபவர், இவர் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்களின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ.

இவர் 2020 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய கா/பே ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த  திரைப்படத்தின் மூலம் ரசிகர் மனதில் ஓரளவு இடம் பிடித்தார் இதனை தொடர்ந்து சுதா கொங்கார இயக்கத்தில் உருவாக்கிய பாவ கதைகள் அந்தாலாஜி தொடரில் நாயகியாக நடித்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பு பெற்று கொடுத்தது இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகிய விடுதலை என்ற திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர்.

விடுதலை திரைப்படத்தின் மூலம் இவர் பெயரையும் புகழையும் பெற்றார் அது மட்டும் இல்லாமல் இவர் ஜிவி பிரகாஷ் தங்கை என்பதைத் தாண்டி தற்பொழுது விடுதலை பட நடிகை என்ற பெயரையும் எடுத்துவிட்டார். சமூக வலைதளத்தில் பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிடுவார்கள் அந்த வகையில் சமீப காலமாக பவானி ஸ்ரீ சில புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

bhavani sri
bhavani sri

அந்த வகையில் தற்பொழுது AI என்ற செயலின் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

bhavani sri
bhavani sri
bhavani sri
bhavani sri
bhavani sri
bhavani sri

Leave a Comment