தொடர்ந்து எகிறும் ‘விடுதலை’ படத்தின் வசூல்.! 4வது நாளில் இத்தனை கோடியா.?

தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த தற்பொழுது முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாக இருப்பவர் தான் நடிகர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் முதல் பாகம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் விடுதலை திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலை குவித்து வருவதால் இரண்டாம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிமாறன் பல புத்தகங்களில் இருந்து கதை திருடியதாகவும் ஆனால் அந்த கதையின் உரிமையாளரிடம் எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் திருடி இருப்பதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இது குறித்து வெற்றிமாறன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் தரவில்லை. மேலும் தமிழர்களின் பாரம்பரிய, பண்பாடுகளை வெற்றிமாறன் தவறாக மக்களுக்கு உணர்த்துவதாகவும் கூறிவரும் நிலையில் முதல் நாள் வசூலை விட நான்காவது நாள் வசூல் அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் தற்பொழுது இந்த படம் வெளியாகிய நான்கு நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபீஸில் இதுவரை ரூபாய் 22 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. நேற்று திங்கள் கிழமை என்பதால் வசூல் குறைந்திருக்கும் நிலையில் இந்த வாரம் இறுதிக்குள் வசூல் மேலும் என கூறப்படுகிறது.

இவ்வாறு விடுதலை திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் சூரி விஜய் சேதுபதி நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் இந்த வெற்றியினை பட குழுவினர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment