வெறியாட்டம் ஆடும் விடுதலை திடீரென அதிகரிக்கும் திரையரங்கு எண்ணிக்கை.! மூன்றாவது வாரத்தில் உச்சம் தொடுகிறதா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதமேனன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி பல திரையரங்குகளில் ரிலீசானது. விடுதலை திரைப்படம் சிம்புவின் 10 தல திரைப்படத்துடன் வெளியானது ஆனால் பத்து தல திரைப்படத்தை விட விடுதலைப் பாடத்தை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.

விடுதலை படத்திற்கு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையேவும் சிறப்பான விமர்சனங்களும் வசூலும் வந்து சேர்ந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதியான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எட்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியது ஆனாலும் விடுதலை திரைப்படத்தின் வரவேற்பு கொஞ்சம் கூட குறையாமல் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் நேற்று விடுதலை திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் செய்யப்பட்டது.

இயற்கை வளங்கள் குறித்து மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளியானது. படத்தின் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார் வெற்றிமாறன் அந்த வகையில் விடுதலை திரைப்படத்தில் அவர் தேர்வு செய்த கேரக்டர் அனைத்தும் சிறப்பாக அமைந்தது. குமரேசன் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் சூரி நடித்து இருந்தார். அதேபோல் வாத்தியார் கதாபாத்திரத்தில் தன்னுடைய பெஸ்ட் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது படம் தற்பொழுது தெலுங்கில் வெளியாகியுள்ளதால் தெலுங்கு ரசிகர்களும் விடுதலை திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள் அதற்கும் அங்கு சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதனால் முதல் பாகம் மட்டும் தற்பொழுது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது இரண்டாவது பாகம் நான்கு மாதத்திற்குள் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் ஒரு சில வேலைகள் மீதமுள்ளதால் அதனை முடித்துவிட்டு விரைவில் இரண்டாவது பாகம்  வெளியிடுவார்கள் படக்குழு என தெரிய வந்தது.

படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தில் இன்னும் சில காட்சிகள் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சில சிஜி வேலைகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் இரண்டாம் பாகத்தின் வேலைகள் முடிவடைந்த உடன் ரிலீஸ் செய்யப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எட்டு திரைப்படங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியும் விடுதலை திரைப்படத்தின் திரையரங்குகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் விடுதலை பட குழு செம குஷியில் இருக்கிறார்கள்.

Leave a Comment