விடுதலை 2 பெருமாள் வாத்தியார் ஃப்ளாஷ் பேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடி அஜித் பட நடிகை.! போடு தகிட தகிட…

Viduthalai 2 : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்தவர் வெற்றிமாறன் பொதுவாக பல இயக்குனர்கள் முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதற்கு எதிர்மறையாக தன் கதைக்கு ஏற்ற நடிகரை தேர்வு செய்து படத்தை வெற்றி பெற செய்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன இந்த நிலையில் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். விடுதலை முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது.

முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேர்த்தான் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியாரை பிடிக்க வேண்டும் என அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள் போலீசார் அவர்களில் சூரியின் காதலி மாட்டிக்கொள்வார் அதனால் சூரி பெருமாள் வாத்தியாரை நான் பிடித்து தருகிறேன் என விஜய் சேதுபதியை மடக்கி பிடித்து விடுவார்.

ஆனால் விஜய் சேதுபதி எதற்காக பெருமாள் வாத்தியராக ஒளிந்து கொண்டிருக்கிறார் அவர் பின்னணியில் என்ன நடந்தது என அனைத்தையும் விசாரித்துப் பார்த்த சூரி கண் கலங்கி விடுவார். விடுதலை இரண்டாவது பாகத்தில் கதை என்று ஒரு தகவல் வைரலாகி வந்தது அதாவது இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியை பிடித்துக் கொடுத்த சூரி கையில் துப்பாக்கியை கொடுத்து என்கவுண்டர் செய்ய சொல்லுகிறார்கள் ஆனால் சூரி முடியாது எனக்கூறி விடுகிறார். பிறகு சேத்தான் துப்பாக்கி பிடுங்கி பெருமாள் வாத்தியாரை என்கவுண்டர் செய்வது போலவும் பிறகு சக போலீசர்களை தாக்கி விட்டு சூரி காட்டிற்குள் மறைந்து வாழ்வார் எனவும் பல கதைகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் அவருடன் சேர்ந்து தினேஷ் அவர்களும் நடிக்க இருக்கிறார் மஞ்சுவாரியர் தினேஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

manju warrier
manju warrier