சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக் பற்றி சத்யராஜ் வெளியிட்ட வீடியோ காணொளி.!

தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் விவேக் இவர் 2000 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு இடையில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

சினிமாவையும் தாண்டி மக்களுக்கு ஒரு உதவி ரசிகர்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் செய்யும் நடிகரும் இவர் தான் என்று கூறலாம் இவர் சினிமாவில் எத்தனை திரைப்படங்கள் நடித்தாலும் அப்துல் கலாம் கூறிய பொன்மொழிகளை கடைப்பிடித்து பல லட்சம் மேல் மரக்கன்றுகளை வாங்கி நட்டு உள்ளார்.

இவர் நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார் இவரது இழப்பை தாங்க முடியாமல் தற்போது வரை பல பிரபலங்கள் தனது சமூக வலைதளப் பக்கங்களில் விவேக்கை பற்றி உண்மைகளைக் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் பல சினிமா பிரபலங்கள் விவேக்கை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் பகிர்ந்து விவேக் செய்த நல்ல விஷயங்களை கூறி வந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜும் அவரது இழப்பை தாங்க முடியாமல் ஒரு பதிவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் அதில் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணரின் இழப்பு என்னால் தாங்க முடியவில்லை என்றும் மேலும் பல விஷயங்களை அவர் கூறியுள்ளார்.இவர் பகிர்ந்த பதிவானது தற்பொழுது விவேக் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment