தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து யுவன் சங்கர் ராஜா இந்தத் திரைப்படத்திற்காக இசையமைத்து வருகிறார்.
மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் வலிமை திரைப்படம் நடந்து வந்தபோது தல அஜித் அங்கு பைக்கில் வீலிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.
ஆனால் வலிமை படத்தை பற்றி பெரிதாக ரசிகர்களுக்கு அப்டேட் படக்குழுவினர்கள் விடவில்லை இதனால் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் வலிமை அப்டேட் எப்போ விடுங்க என கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரான திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரச்சாரத்திற்கு சென்றபோது தல ரசிகர்கள் அவரிடம் வலிமை அப்டேட் இருந்தா சொல்லுங்க என கேட்டுள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ காணொளி.
#Valimai Update 😂😂
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் update கேட்ட தல ரசிகர்கள் pic.twitter.com/tArT59MYr6
— AJITH KUMAR FANS CLUB (@Fans_of_thala) January 1, 2021