மிரட்டலாக உருவாகியுள்ள விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் வீடியோ… ரணக் கொடூரமா இருக்கு என கூறும் ரசிகர்கள்.!

சேது திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் தான் விக்ரம் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் வெளியாகி தோல்வியை தந்து கொண்டிருந்தது. ஆனால் தன்னம்பிக்கையை விடாத விக்ரம் சேது திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான பொழுது இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தது.

அவ்வாறு இவர் நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்திருக்கும்.மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கரிகால சோழனாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதற்கிடையில் இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக தற்பொழுது விக்ரம் மற்றும் பல பிரபலங்களும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.குறிப்பாக கூற வேண்டும் என்றால் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் இந்த திரைப்படத்தை விக்ரமின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

என்று கூறலாம் மேலும் நேற்று இயக்குனர் பா. ரஞ்சித் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.அதன்படி தற்பொழுது தங்கலான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும் பொழுது விக்ரம் பயங்கரமாக நடித்துள்ளார்.

என்று தான் கூற வேண்டும். கொஞ்சம் கூட விக்கரமா இது என கண்டுபிடிக்கும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் பக்காவாக நடித்து வருகிறார்.இந்த மேக்கிங் வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் தற்பொழுது இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment