ஜில்லா படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுக்கு விஜய் மேக்கப் போட்டு கலாய்க்கும் வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது!!

0

vijay with kajal agarwal video:நடிகர் விஜய்யை பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். தமிழ் நாடு மட்டுமல்லாமல் பிற இடங்களிலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக விஜய்யின் மாஸ்டர் திரைபடத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் விஜய்யை பார்க்க முடியாத காரணத்தால் ஏமாந்து வருகின்றனர். விஜய் தனது படத்தின் பாடல் புரமோஷனுக்கு அல்லது படத்தின் புரமோஷனுக்கு டிவியில் பேசுவார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கிற்கு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அது எதுவும் இல்லாததால் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மரக்கன்று நட்டு விஜய் அவரையும் நட சொல்லி கேட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாகி வந்தது அதன் பிறகு விஜய்யின் புகைப்படம் எதுவும் வெளிவராததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

விஜய் ரசிகர்கள் விஜய் படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா என ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். எந்த அப்டேட்டும் வராத காரணத்தால் எப்படியாவது விஜய்யை பார்த்து விட முடியாதா என ஏங்கி வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் எப்போதும் பார்க்க பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார். இவர் குறும்புத்தனம் செய்து இதுவரை யாரும் பார்த்ததே இல்லை. அந்த கவலையை போக்கும் வகையில் நடிகர் விஜய் ஜில்லா படத்தில் பாடல் எடுக்கும்போது ஹீரோயின் காஜல் அகர்வாலை நடனமாடும் போது கண்ணாடி காண்பித்து கலாய்த்து இருப்பார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.