அடி ஒவ்வொன்றும் இடியாய் விழுகிறது பாக்சிங் கற்றுக்கொண்ட ஆர்யாவின் வீடியோ.!

தமிழ் திரையுலகில் ஏரால திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகர்களின் வரிசையில் ஆர்யாவும் ஒன்று இவர் தமிழ்த் திரையுலகில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியது மட்டும்மல்லாமல் இவரது பெண் ரசிகர்கள் பலரும் இவருக்கு சாக்லேட் பாய் என்ற பட்டத்தை கொடுத்து உள்ளார்கள்.

இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும்.மேலும் ஆர்யா தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை நாம் அறிவோம்.

அந்த பர்ஸ்ட் லுக்கை பார்க்கும் போது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பாக்ஸிங் கதை கொண்டுதான் எடுக்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தத் திரைப்படத்திற்காக ஆர்யா தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பதை அந்த புகைப்படத்தில் நாம் பார்த்தோம்.

இந்நிலையில் சார்பட்டா திரைப்படத்திற்காக ஆர்யா பாக்சிங் கற்றுக் கொண்ட போது எடுத்த வீடியோ காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இவர் பகிர்ந்த இந்த வீடியோ காணொளி ஆனது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment