அஜித்துடன் மோத மீண்டும் கோதாவில் குதித்த விக்டர்.! ஏகே 62 திரைப்படத்திற்கு பக்கா பிளான் போடும் மகிழ் திருமேனி..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டும் இல்லாமல் விரைவில் ஏகே 62 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது .

இந்த நிலையில் மகிழ்  திருமேனி அவர்கள் ஏகே 62 திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகரை மெயின் வில்லனாக நடிக்க வைக்க பக்கா பிளான் போட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நடிகர் தான் அஜித்திற்கு வில்லனாக கரெக்டா இருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வில்லன் நடிகர் ஏற்கனவே அஜித் அவர்களுக்கு வில்லனாக நடித்து உள்ளார்.

அதாவது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருப்பார் நடிகர் அருண் விஜய் இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திலும் இந்த கூட்டணி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அருண் விஜய்யை வைத்து மகிழ் திருமேனி தடம் மற்றும் தடையற தாக்க ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அருண் விஜய் ஈசியாக ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது உறுதி செய்யப்பட்ட தகவலாக வெளியாகவில்லை இது ஒரு வதந்தியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை மட்டும் போடப்பட்ட நிலையில் இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Comment