பெரிய ஹனிமூனுக்கு பிளான் பண்ணும் விக்கி, நயன்தாரா – அடுத்து எங்க போறாங்க தெரியுமா..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் நிஜ வாழ்க்கையில் சற்று சர்ச்சைகளிலும் சிக்கி தவித்தார் இதிலிருந்து நயன்தாராவை வெளியே எடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தின் போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது பின் தொடர்ந்து இவர்கள் ஏழு வருடம் காதலித்து வந்தனர்.

ஒரு வழியாக ஜூன் 9ஆம் தேதி உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரையும் அழைத்து மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ரஜினி, ஷாருக்கான், சூர்யா என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அசத்தினார் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுத்து அசத்தினார்.

விக்கி நயன்தாரா ஜோடி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பையில் தங்கம் வெள்ளி கொடுத்து அழகு பார்த்தது மேலும் ஆதரவற்ற முதியவர்கள் குழந்தைகள் ஒரு லட்சம் பேருக்கு உணவு கொடுத்து அசத்தியது இந்த ஜோடி.

அதன்பிறகு இந்த ஜோடி திருப்பதி கேரளா என சென்று சாமி தரிசனம் செய்த இருந்தது வந்தனர். ஒரு கட்டத்தில் திடீரென ஹனிமூனுக்காக தாய்லாந்து பறந்தனர் இந்த ஜோடி தற்போது தாய்லாந்தில் இவர்கள் ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து அசத்துகின்றன. தற்பொழுது விக்கி நயன்தாரா தாய்லாந்துக்கு சென்றது ஒரு சின்ன ஹனிமூன் டிரிப் என கூறப்படுகிறது.

ஏன் என்றால் நயன்தாராவுக்கு இப்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஷாருக்கான் உடன் ஜவான், கனெக்ட் மற்றும் ஒரு சில படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன அதன் படப்பிடிப்பு அனைத்தையும் வெகு விரைவில் முடித்துவிட்டு மிகப்பெரிய ஒரு ஹனிமூன் ட்ரிப் ரெடி செய்து பல நாடுகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டு உள்ளது இந்த ஜோடி.

Leave a Comment