விக்கி – நயன்தாரா ஜோடியின் ஹனிமூன் ரத்து.? மீண்டும் நடிக்க வந்த லேடி சூப்பர் ஸ்டார்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

viki and nayanathara
viki and nayanathara

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா 7 வருடங்களுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒருவழியாக கடந்த ஜூன் 9 ஆம் தேதி சினிமா பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா கல்யாணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார். இந்த கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு  தாம்பூலப் பையில் தங்கம், வெள்ளி பொருட்களை கொடுத்து அழகு பார்ப்பது. மேலும் திருமண நாளன்று ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கி அசத்தியது இந்த ஜோடி.

திருமணம் வெற்றிகரமாக முடிந்த்தை அடுத்து அடுத்த நாளே விக்கி – நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து தற்போது விக்கி நயன்தாரா ஜோடி கேரளா சென்று தற்பொழுது  கோயில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர் மேலும் கேரளாவில் விக்கி – நயன் இந்த ஜோடிக்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்துள்ளது.

இப்படி இருந்தாலும் ரசிகர்கள் உங்களுக்கு எப்பொழுது ஹனிமூன் என கேட்க தொடங்கி உள்ளனர் ஆனால் கிடைத்துயுள்ள தகவல் என்னவென்றால் ஹனிமூனுக்கு இடமே கிடையாது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து “ஜாவன்” படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து வருகின்ற 25ஆம் தேதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  கேரளாவில் இருந்து புறப்பட்டு அங்கு சூட்டிங்கில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் முடிந்த பிறகும் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணாமல் சினிமா சினிமா என நயன்தாரா சுற்றுவது தற்போது அவரது ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது.