விக்கி – நயன்தாரா திருமண வரவேற்புக்கு முதல் நபராக வரும் நடிகர் – நடிகை இவங்க தான்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

nayanthara and vignesh
nayanthara and vignesh

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார் இவர் கடைசியாக தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல  ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து நயன்தாரா ஆக்சிஜன், கனெக்ட், லயன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 6 வருடங்களுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலித்து வருகிறார்.  ஆனால் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்ததால் ரசிகர்கள் இருவரையும் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி எப்போது திருமணம் என்று அதற்கு பதிலளிக்கும் வகையில் இருவரும் ஜூன் 9ஆம் தேதி.

திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வந்த வண்ணமே இருக்கிறது இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருப்பதி கோவிலில் சில முக்கிய உறவினர்களை கூப்பிட்டு திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனராம்.

அதன்பின் இவர்களது ரிஷப்ஷன் முக்கிய பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரபலமாக வைக்கப்பட்டு அதில் சினிமா பிரபலங்கள் சேர்ந்த அனைவரையும் அழைக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சினிமா நடிகர் நடிகைகள் வருவார்கள் அதிலும் இப்பொழுது நடிகை நயன்தாராவுடன் ரொம்ப நெருக்கமாக இருக்கும் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்கள் முதலாவதாக வருவார்கள் என கூறப்படுகிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவர்கள் இருவருடன் சேர்ந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த படம் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் அடித்து நொறுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.