விக்கி – நயன்தாராவை முதலில் சேர்த்து வைத்தது யார் தெரியுமா.? அட இவரா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

தென்னிந்திய சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் நடிப்பது மற்றும் சோலோ படங்களில் நடிப்பதால் இவருடைய வெற்றி சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இவர் நடிப்பில் கடைசியாக கோல்ட், கனெக்ட் போன்ற திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது

அதனை தொடர்ந்து நயன்தாரா கைவசம் ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா மறுபக்கம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைக்கு தாயாக குடும்பத்தையும் நன்றாக முறையில் பார்த்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் நானும் ரவுடிதான் படம் உருவானது குறித்தும் நயன்தாரா பற்றியும் பேசியுள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படமான வை ராஜா வை படத்திற்கு நாங்கள் தான் டிசைன் செய்ததாகவும் அப்பொழுது ஐஸ்வர்யா மேம் தனுஷிடம் தங்களைப் பற்றி தெரிவித்தது அதன் பின் விஐபி படத்தில் நடித்த பொழுது தான் தனுஷிடம் அந்த கதையை கூறியதாகவும் உடனே நான் தயாரிக்கிறேன் யார் நடிகர் என கேட்டதற்கு அப்பொழுது கௌதம் கார்த்தி தான் நடிக்க இருந்தது

அதன் பிறகு விஜய் சேதுபதி ஓகே ஆனார் என்று தெரிவித்தார் மேலும் கூறுகையில் இந்த படத்தில் நயன்தாரா எப்படி வந்தார் என்கின்ற கேள்விக்கும் பதில் அளித்தார் கதை யார்கிட்ட சொல்லம் – னும்னு தனுஷ் கேட்டதற்கு நஸ்ரியாவை யோசித்து வைத்திருப்பதாக கூறினார் முக்கிய ரோல் என்பதால் தனுஷ் சார் நயன்தாராவை பார்த்து கதை தெரிவிக்க சொன்னார்..

உடனே சென்று மதியம் 1:30 மணிக்கு கதையை கூறிவிட்டதாகவும் யாரும் பண்ணாத ஒன்றினை நயன்தாரா அப்பொழுது செய்தது இதுவரையில் யாரையும் பார்த்ததும் இல்லை எனவும் போனை ஆப் செய்து கதையை கூறுங்கள் என்று நயன்தாரா கேட்டதும் தனக்கு நம்பிக்கை வந்து விட்டதாகவும் அதன் பின்னர் அவர் கேட்டு காமெடியால் விழுந்து விழுந்து சிரித்து விட்டார் என நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.

கதை கூறி முடிந்த உடனேயே தான் படம் பண்ணுகிறேன் என்று தெரிவித்தார். அப்படி தனுஷ் மட்டும் இந்த படத்தில் நயன்தாராவிடம் சிபாரிசு செய்யது அனுப்பாமல் இருந்திருந்தால் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நஸ்ரியா தான் நடித்திருக்க வேண்டும் மேலும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து இருக்க மாட்டார்கள்.

Leave a Comment