சினிமாவைப் பொருத்தவரை எந்தத் திரைப்படம் முன்னிலையில் இருக்கிறது என்பதை பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட் வைத்துதான் கூறுகிறார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய வசூல் விவரம் என்றால் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் தான்.
சென்னை பாக்ஸ் ஆபிஸ்ஸில், 10 கோடி அவரை ஒரு திரைப்படம் வசூல் செய்து விட்டது என்றால் அது கௌரவமான வசூல் என கூறுகிறார்கள், ஆனால் சமீபகாலமாக அதையும் தாண்டி 15 கோடி 20 கோடி என களை கட்டி வருகிறது தமிழ் திரைப்படங்கள்.
அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த டாப் 10 லிஸ்ட் இதோ.
அந்த வகையில் முதலிடத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் 25 கோடி வரை வசூல் செய்தது, இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 திரைப்படம் 18 கோடி வரை வசூல் செய்தது, மூன்றாவதாக பேட்ட திரைபடம் 16 கோடி வரை வசூல் செய்தது, நான்காவதாக தர்பார் திரைப்படம் 15.5 கோடி வரை வசூல் செய்தது. ஐந்தாவதாக சர்கார் திரைப்படம் 15 கோடி வசூல் செய்தது.
ஆறாவதாக பிகில் திரைப்படம் 13.5 கோடி வசூல் செய்தது, ஏழாவதாக விஸ்வாசம் திரைப்படம் 13.3 கோடி வரை வசூல் செய்துள்ளது, எட்டாவது இடத்தில் மெர்சல்திரைப்படம் 13 கோடி வசூல் செய்துள்ளது, 9வது இடத்தில் தெறி திரைப்படம் 11 கோடி வரை வசூல் செய்தது, பத்தாவது இடத்தில் கபாலி திரைப்படம் 11 கோடி வசூல் செய்து இடம் பிடித்துள்ளது.