கௌதம் மேனனுடன் மீண்டும் கை கோர்க்கும் கமலஹாசன் வேட்டையாடு விளையாடு 2 உருவாகிறதா.?

கடந்த 2006ம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் வேட்டையாடு விளையாடு, ஹிந்தி படத்தில் கமல்ஹாசன் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார், இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார், கௌதம் மேனன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும், இந்த நிலையில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் விபத்தை தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் கமல்ஹாசன் சமீபத்தில் ஜிப்சி திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிற்கு பாராட்டை தெரிவித்தார்.

அதனால் ஜீவா, ராஜிமுருகன், கௌதம் மேனன் ஆகியோர் கமலஹாசனை சந்தித்தார்கள், அந்த சந்திப்பில் கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு-2  பாகத்தை பற்றி கௌதம் மேனனிடம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.. அதேபோல் கமலஹாசன் மீண்டும் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற ஆசை படுவதால் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது, அதேபோல் கமல்ஹாசன் இந்தியன்2 திரைப்படத்தை முடித்துவிட்டு தேவர்மகன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment