விருதுகளை வாரி குவிக்கும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் மனைவியா இது.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான் ஏனென்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் மெகாஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளன. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரி குவித்துள்ளன.

அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முதலாக வெளியாகிய பொல்லாதவன் திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவியது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதேபோல் கடைசியாக அசுரன் திரைப்படம்  பல விருதுகளையும் வென்றது.

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.  இந்த திரைப்படத்தை முழுவதுமாக முடிந்து விட்டு அடுத்ததாக சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

தமிழ் சினிமாவில் என்னதான் பல இயக்குனர்கள் இருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் வெற்றிமாறன் இதுவரை தன்னுடைய குடும்பத்தை மீடியா பக்கமே காட்டியதே கிடையாது. அப்படியிருக்கும் நிலையில் வெற்றிமாறன் தன்னுடைய மனைவி மற்றும்  மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் வெற்றிமாறனின் மனைவி மிகவும் எளிமையாக இருக்கிறார். தற்பொழுது இருக்கும் பல இயக்குனர்கள் தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் ஹிட் கொடுத்து விட்டாலே பயங்கரமாக பந்தா பண்ணுவார்கள்  ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளார்.

அப்படி இருந்தும் தனது எளிமையான வாழ்க்கை தான் அவர் வாழ்ந்து வருகிறார் அது இந்த புகைப்படத்தை பார்த்தாலே பலருக்கும் தெரிய வரும்.

vetrimaran
vetrimaran

Leave a Comment