லட்சியத்திற்கு தடையாக இருந்த காதலையே தூக்கி எறிந்த வெற்றிமாறன்.? அட இந்த காலத்திலும் இப்படி ஒரு மனுஷனா.!

vetri-maran
vetri-maran

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தலை தூக்கிய இயக்குனர் தான் வெற்றி மாறன் அதன் பின்பு ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கி ஆறு தேசிய விருதை வென்றார். பின்பு வடசென்னை,அசுரன் தற்பொழுது விடுதலை போன்ற பல திரைப்படங்களை இயக்கினார் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவர் அதிகமாக கிராமத்து கதைகளம் கொண்ட திரைப்படங்களை தான் எடுத்து வருகிறார்.

பொதுவாகவே வெற்றிமாறன் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் காரராக பேசுபவர் என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் எதற்காகவும் கொஞ்சம் கூட படப்பிடிப்பு தளத்தில் இறங்கி போக மாட்டாராம் தான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்யுங்கள் என்ற அளவிற்கு படபிடிப்பு தளத்தில் நடந்து கொள்வாராம்.

சினிமாவில் மட்டும் தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால் தனது இல்ல வாழ்க்கையிலும் இப்படித்தான் இருந்தாராம் வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகளும் இருக்கிறார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் கதையை பற்றி வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனை சென்னையில் உள்ள ஒரு டீக்கடையில் தான் முதன்முதலாக ஆர்த்தி பார்த்தாராம் ஆனால் வெற்றிமாறன் கொஞ்சம் கூட திரும்பி பார்க்கவில்லையாம்.சில நாட்களில் வெற்றிமாறனை ஆர்த்திக்கு பிடித்துப் போகவே தனது காதலை அவரிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு வெற்றிமாறன் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் பத்து வருடம் நீங்கள் காத்திருக்க வேண்டும் அதற்கு சரியா என்று கேட்டுள்ளாராம்.

மேலும் அவர் ஒரு சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வார் என நினைத்த ஆர்த்திக்கு அவரை திருமணம் செய்து கொள்வதற்கு எட்டு வருடங்கள் ஆனதாம். இதற்கு இடையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டால் நீ வேறு ஒருவரை திருமணம் செய்து கொள் எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என பேசுவாராம்.

vetri maran
vetri maran

ஒரு நாள் ஆர்த்திக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததாம் என்னால் அவரை விட்டு போக முடியாத நிலையில் இருந்த பொழுது வேலைக்குப் போக மாட்டேன் என்று ஆர்த்தி சொன்னாராம் அதற்கு உன்னுடைய கனவையும் என்னுடைய கனவையும் இந்த காதல் தடுத்தால் நாம் இருவரும் காதலிக்க வேண்டாம் என்று சொல்லிய பிறகு ஆர்த்தி உடனே அந்த வேலையில் சேர்ந்து விட்டாராம்.மேலும் இவர் அதே கம்பெனியில் ஜெனரல் மேனேஜராகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறாராம்.