முதல் முறையாக விஜயுடன் படம் பண்ணுவது குறித்து பேட்டியில் பேசிய வெற்றிமாறன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! என்ன சொன்னார் தெரியுமா.?

விஜய்யின் சமீபகால திரை படங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியதோடு மட்டுமல்லாமல் நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளதால் தற்போது அவரை வைத்து படம் இயக்கிய பல இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அதற்கு ஏற்றார்போல தளபதி விஜய்யும் தொடர்ந்து 4, 5 படங்களில் கமிட்டாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். முதலாவதாக நெல்சன் திலிப்குமார் உடன் கைகோர்த்து “பீஸ்ட்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு 75% செய்திகள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின்றன.

அதை முடித்து விட்டு பிறகுதான் மற்ற இயக்குனருடன் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதிலும் ரசிகர்கள் குறிப்பாக விஜய் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என சமூக வலைதள பக்கத்தில் கேட்டுக் கொண்டு வந்த நிலையில் இருவரும் இணைய போவதாக தகவல்கள் உறுதி படுத்தப்பட்டன.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விஜயுடன் படம் பண்ணுவது குறித்து பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அதில் கூறியுள்ளது. விஜயுடன் இணையும் படம் தாமதமாகி கொண்டு இருக்கிறது எனக்கு நன்றாகவே தெரிகிறது காரணம் நான் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளேன் அந்த படங்கள் தாமதமாகவே போய்க்கொண்டிருக்கிறது.

விஜயுடன் பணிபுரிய எனக்கும் சந்தோஷம் தான் ஆனால் இந்த வேலைகளை முடித்துவிட்டு உடனடியாக நான் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குவேன் என உறுதியாக அவர் கூறியுள்ள செய்தி இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Leave a Comment