இயக்குனர் ஆவதற்கு முன்பாகவே நடிகராக நடித்துள்ள வெற்றிமாறன்..! இணையத்தில் லீக்கான அன்சீன் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இயக்குனர் தான் வெற்றிமாறன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தான் இயக்கிய முதல் திரைப்படத்தின் மூலமாக மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவில் பதித்து விட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் கைகோர்த்து ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தொடர் வெற்றியை தொடர்ந்து நமது இயக்குனர் வெற்றிமாறன்  பல்வேறு திரைப்படங்களில் தனுஷுடன்  இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான விசாரணை, வட சென்னை, அசுரன், போன்ற அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது இந்நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் பிரபல காமெடி நடிகரான சூரி உடன் இணைந்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது மட்டும் இல்லாமல் மிக விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராக போகிறது எனவும் செய்திகள் வெளிவந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதள பக்கத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் வெற்றிமாறன் அவர்கள் திரைப்படங்கள் இயக்குவதற்கு முன்பாக ஒரு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படத்தினை இயக்குனர் கதிர் தான் இயக்கி இருந்தார் நிலையில் வெற்றிமாறன் நடித்த அந்த காட்சியின் புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

vetrimaran-01
vetrimaran-01
vetrimaran-01
vetrimaran-01
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment