வெற்றிமாறன், விஜய் எப்பொழுது இணைய போகின்றனர் – ஒருவழியாக உண்மையை சொன்ன பிரபல நடிகர்.!

தளபதி விஜய் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் கடைசியாக மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் முதல்முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து  வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக  பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக கால் தடம் பதித்து இருக்கிறார்.

அந்த படத்தை தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வரும் வம்சி என்பவர் இயக்கியிருக்கிறார் தில் ராஜூ என்பவர் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் தெலுங்கு அடியெடுத்து வைக்க மறுபக்கம் விஜய் எப்பொழுது வெற்றிமாறனுடன் இணைந்து நடிப்பார்.

என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.  இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் விஜய் பற்றி பேசி வந்தார் அப்பொழுது விஜய் பற்றி அவர் கூறியது  : விஜய் அவர்கள் எப்பொழுது வெற்றிமாறனுடன் இணைவார் என கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த ஜி வி பிரகாஷ்.

டைமிங் தான் முக்கியம் விஜய்யின் கால்ஷீட் கிடைக்க வேண்டும் அதே போல வெற்றிமாறனும் மற்ற படங்களை முடித்துவிட்டு சரியான நேரத்தில் அணுகினால் மட்டுமே இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும். இருவரும் யோசித்து தான் படத்தில் இணைவார்கள் என கூறி உள்ளார்.

Leave a Comment