அசுரன் திரைப்படத்தை இயக்க வெற்றிமாறனுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதா..! இணையத்தில் கசிந்த உண்மை..!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் வெற்றிமாறன். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இந்த திரைப்படத்தில் இருந்து தனுஷை வைத்து ஆடுகளம் திரைப்படத்தையும் இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் .

அந்த வகையில் நமது நடிகர் அதன் பிறகு அடுத்த விசாரணை வட சென்னை  போன்ற அனைத்து திரைப்படங்களும் நல்ல கதையாம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற வழி வகுத்தது.

இவ்வாறு தொடர் வெற்றியை கொடுத்ததன் காரணமாக இயக்குனர் வெற்றிமாறனை அனைவரும் வெற்றி இயக்குனர் என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு அசுரன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் தான் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் மஞ்சு வாரியர் அவர்கள் கதாநாயகியாக நடித்திருப்பார். இவர் வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக  இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது அதற்கான விடை தெரிந்துள்ளது அதாவது அசுரன் திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள் வாங்கிய சம்பளம் வெறும் ஐந்து கோடி மட்டும் தான்.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து நிலையில் தற்போது ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூரி நடிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

asuran-1
asuran-1

Leave a Comment