வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் கதாநாயகியாக சூர்யாவுடன் இணையும் கார்த்தி பட நடிகை!!

0
vadivasal-surya
vadivasal-surya

vetrimaran vadivasal movie heroine : நடிகர் சூர்யா தற்போது சூரரைப்போறறு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்போது OTT  தளத்தில் வெளியாக உள்ளது. அதனை படக்குழுவினரை சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் திரை உலகில சிறப்பான இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்த படம் வாடிவாசலில் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்காக சூர்யா காளைகளை அடக்கும் பயிற்சிகளை சென்னையில் ஒரு செட் போட்டு பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார் என தெரியவருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இப்படத்தில் நடிகை யார் என்று பலரும் கேட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

இத்திரைப் படத்தில் ஹீரோயினாக முதல் முறையாக சூர்யா உடன் கை கோர்க்க உள்ளார் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் தற்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆண்ட்ரியா எப்பொழுதும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் என்பதால் இத்திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிவருகின்றனர். இத்திரைப்பட ஷூட்டிங் ஜனவரி மாதத்திற்கு மேல் நடைபெறும் என தெரிய வருகிறது.