சத்தமே இல்லாமல் மிரட்டபோகும் வெற்றிமாறன்.! எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வட சென்னை. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று தான் கூற வேண்டும்.

வடசென்னை படத்தை இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கியுள்ளார் இந்த படத்தில் தனுஷ் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கலோ  அதே அளவிற்கு அமீர் ராஜன் கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

வடசென்னை திரைப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கதாபாத்திரம் அமீர் கதாபாத்திரம்தான். இருந்தாலும் படத்தின் நீளம் கருதி அவரின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக  ஆண்ட்ரியா அவர்கள் நடித்துள்ளார். தனுஷின் அன்பு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜனின் வாழ்க்கை வரலாறு மட்டும் தனியாக படமாக்க படுவதாக கூறப்படுகிறது. ஆம் வட சென்னை 2 திரைப்படமான ராஜன் வகையறா என்று எடுக்க வேண்டுமென வெற்றி மாறன் விரும்புகிறார்.

இதற்கான வேலைகளும் தற்போது தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜனின் 15 வயது முதல் 24 வயது வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு ராஜன் வகையறா என்றும் கூறப்படுகிறது.

vada chennai 2
vada chennai 2

இந்த திரைப்படத்தில் சிறுவயது ராஜனாக நடிகர்கள் கென் கருணாஸ் அவர்கள் நடிக்க உள்ளதாகவும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது இந்த ராஜன் வகையறா படத்தின் படபிடிப்பு கடந்த சில மாதங்களாகவே அவ்வபோது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வாடிவாசல், விடுதலை  போன்ற திரைப்படங்களில் பிஸியாக இருந்தார். அசுரன் படம் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வாடி வாசல் திரைப்படம் திரையில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment