தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் தமிழில் ஆடுகளம் பொல்லாதவன் வடசென்னை அசுரன் என பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வெற்றிமாறன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக நல்ல கதை உள்ள திரைப்படத்தை கொடுத்து வருகிறார் இந்த நிலையில் தற்பொழுது காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசலில் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுமட்டுமில்லாமல் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் லிஸ்டில் வெற்றிமாறன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த திரைப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது, வெற்றிமாறனின் கதை, திரைக்கதையில் சசிகுமார் நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் சசிகுமார் நடிக்கும் இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும், கதிரேசனின் பைவ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
இவர்கள் ஏற்கனவே இரண்டு முறை இணைந்து படங்களை தயாரித்து உள்ளார்கள் இந்த நிலையில் மூன்றாவது முறையாக வெற்றிமாறனுடன் பைவ் ஸ்டார் கதிரேசன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் படத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் இயக்குனர் இசையமைப்பாளர் என அனைவரையும் படகுழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.