வெற்றிமாறன் பாக்கத்தான் இயக்குனர் மாதிரி தெரிவார் ஆனால் அதையும் தாண்டி இதையெல்லாம் பண்றாரு.. சூப்பர் நியூஸ் இதோ.

vetrimaran
vetrimaran

இயக்குனர்களை எப்பொழுதுமே தமிழ் சினிமா தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் அந்த வகையில் சிறப்பான கதைகளை மட்டுமே பொறுமையாக எடுத்து அதில் வெற்றி கண்டுள்ள அவர்தான் இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அத்தகைய நல்ல படங்களின் மூலம் பல்வேறு டாப் நடிகர்களையும் நல்ல லெவலுக்கு உயர்த்தி விட்டவர் வெற்றிமாறன். இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை அதிகபட்சமாக தனுஷுடன் கைகோர்த்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது.இவர்  படங்களை இயக்குவதை யும் தாண்டி நல்ல படங்களையும் தயாரித்து வருகிறார். இதனால் தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக தற்போது வரை விளங்கி வருகிறார் இவர் தயாரித்த திரைப்படங்களின் மூலம் நல்லதொரு வசூலையும் தீட்டியுள்ளார்.

இவர் இதுவரை பொறியாளன், நான் ராஜாவாக போகிறேன், மிக மிக அவசரம், காக்காமுட்டை, அண்ணனுக்கு ஜே ,லென்ஸ், உதயம் nh4, சங்க தலைவன் போன்ற பல்வேறு விதமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் பார்க்க அமைதியாக இருந்தாலும் சினிமாவை நன்கு புரிந்து வைத்திருப்பதால் சினிமாவில் வெற்றி நடைப்போட்டு வருகிறார். ஆனால் வெற்றிமாறன் இயக்கும் தயாரிக்கும் படங்களுக்கு இப்பொழுதும் நடிகர் நடிகைகள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.