வெற்றிமாறன் இயக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

0

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கும், இவர்கள் கூட்டணியில் பொல்லாதவன்,ஆடுகளம்,வட சென்னை திரைபடங்கள் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான படம் ‘அசுரன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ் இன்போடைன்மெண்ட் தயாரிப்பில் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக ட்விட்டெரில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.