இரண்டு வருடமாக சிக்கலில் இருந்த வெற்றிமாறன் திரைப்படம். !! ஒருவழியா ரிலீஸ் கன்ஃபார்ம்…

0

vetrimaran movie release on theater date announced: பொதுவாக தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பைனான்ஸ் பிரச்சனையால் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருப்பார்கள் இல்லையென்றால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இப்படி பல திரைப்படங்கள் கிடப்பில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் வெற்றிமாறன் திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக ரிலீசாகாமல் கிடப்பில் இருந்துள்ளது, வெற்றிமாறன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படத்தை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் ஒன்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது, இந்த நாளில் வெற்றிமாறன் தயாரிப்பில் சன் மியூசிக் பிரபலம் சுரேஷ் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காவல்துறை உங்கள் நண்பன்.

இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக திரையரங்கு கிடைக்காமல் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது, இந்த நிலையில் நவம்பர் 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களின் திரைப்படம் இதுவரை பெரிதாக திரையரங்கில் வெளியிடாமல் இருப்பதால் கண்டிப்பாக இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெறும் என வெற்றி மாறன் தரப்பில்  ஆவலுடன் இருக்கிறார்கள்.