தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் புதிய கதை களத்தை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவரும் இவர்தான்.
அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியாகிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை வடசென்னை, அசுரன் என அனைத்து திரைப்படங்களும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இந்த நிலையில் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் நடித்துள்ளார்கள்.
அதேபோல் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த எல்ரெட் குமார் இதற்கு முன்பு தமிழில் யாமிருக்க பயமேன், கோ, முப்பொழுதும் உன் கற்பனையே என பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இவர் முற்போழுதும் உன் கற்பனைகள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இவர் கல்குவாரி மற்றும் சில தொழில்களை செய்து வருகிறார் இந்த நிலையில் இவர் சட்டத்திற்குப் புறம்பாக வரி எய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள் அந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இவர் சொந்த வீடு மற்றும் அலுவலகங்களில் அந்த சோதனை நடைபெற்றது இரண்டு நாட்களுக்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் 3 கோடி ரூபாய் பணமும் 9 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதை கைப்பற்றிய அதிகாரி மேலும் சில தகவல்களையும் சேகரித்து உள்ளார்கள்.
அதாவது 1000 கோடிக்கு மேல் வரியைப் செய்துள்ள இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த தகவல் சினிமா துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.