வெற்றிமாறன் போடும் பக்கா ப்ளான் இதலாம் உண்மை தானா.! ரசிகர்கள் கேள்வி

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். இந்த திரைப்படம் இசை அமைப்பாளராக இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைபடம்  ரொம்ப நீளமாக இருப்பதால் இரண்டு பாகமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளரிடம் இயக்குனர் வெற்றிமாறன் காண்பித்த போது அவர்கள் இந்த படம் ரொம்ப நீளமாக இருக்குது.  இந்த திரைப்படத்தை இரண்டு பாகமாக பிரியுங்கள் என்று வெற்றி மாறனிடம் கூறியுள்ளார்.

எதனால் என்றால் இந்த படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் செம அருமையாக இருக்கு எதையும் ஒதுக்கி விடாதீர்கள் என்று தெரிவித்தார்கள்.விடுதலை திரைப்படம் பாகம்-1 வெளியான பின்பு மூன்று மாதங்களிலேயே வெளியாகும் என்று வெற்றி மாறன் கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்காமல் இருக்கு. விடுதலை படம் இரண்டாம் பாகம் மட்டும் எப்படி வெளியாகும் என்றுகேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த திரைப்படத்தை முழுமையாக முடித்து விட்டு.

சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப் படத்தை கூடிய விரைவில் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த வாடிவாசல் திரைப்படம் முடிந்த பின்புதான் வட சென்னை 2 பாகம் ஆரம்பிக்க தொடங்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version