வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இணைந்த பிரபல முன்னணி நடிகர்.. யார் தெரியுமா.?

vetri-maran-dhanush
vetri-maran-dhanush

கடந்த சில வருடங்களாக ஒரு சில திரைப்படங்களில் தற்போது பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் கடந்தாண்டு வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் என கூட்டணியில்  நடித்திருந்தார்கள் அதேபோல விக்ரம் திரைப்படத்திலும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, என முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தனுஷ் அவர்கள் நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் இதே போல சில நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தனுஷ் அவர்கள் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை முடித்தவுடன் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைய இருக்கிறாராம் தனுஷ். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் தனுசுக்கான கதையை எழுதிவிட்டாராம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதை இரண்டு நடிகர்களை வைத்து நகரக் கூடிய ஒரு கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்த நடிகர் குறித்த சில தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கம் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தில் ஆர் ஆர் ஆர் பட நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தனுஷ் என்டிஆர்-யை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.