சாதனை மன்னன் வெற்றிமாறன் பிறந்தநாளில் வாடிவாசல் பட குழுவினர் என்ன செய்துள்ளார்கள் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் எத்தனை இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த லிஸ்டில் பல இயக்குனர்களை கூறலாம் அத லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் வெற்றிமாறன் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தேசிய விருதுகளையும் வென்றுள்ளார் தற்பொழுது இவர் சூரி விஜய் சேதுபதி அவர்களை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து கூறி வாழ்த்தி வருகிறார்கள் அந்த வகையில் வாடிவாசல் திரைப்படத்தின் பட குழுவினர் சாதனை இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வாடிவாசல் என்ற பெயர் எழுதப்பட்ட கேக் ஒன்றை தயார் செய்து அந்த கேக்கை பட குழுவினர்களுடன் வெற்றிமாறன் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அதேபோல் விடுதலை பட குழுவினர்  விடுதலை படத்தின் சிறப்பு போஸ்டர்களை  வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்கள் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை முடித்தவுடன் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் தொடங்க இருக்கிறார்.

வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் சூட்டிங் சமீபத்தில் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதன் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment