முழுக்க முழுக்க காமெடி திரைப்படத்தை இயக்க இருக்கும் வெற்றிமாறன்.! அதுவும் இந்த நடிகரை வைத்து

0

vetri maran : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ரவுடியிசம், சண்டைக்காட்சிகள், கேங்ஸ்டார் இதுபோல் திரைப்படங்கள்தான், இவர் இயக்கத்தில் வெளியான திரைபடம் அனைத்துமே ஒரு ரவுடிசம் கலந்த முரட்டு திரைப்படமாக தான் இருக்கும். இதைத்தான் வெற்றிமாறன் ரசிகர்களும் விரும்புவார்கள்.

அந்த வகையில் தற்போது இவர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அசுரன் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் முடிந்த பிறகு முழுக்க முழுக்க காமெடி ஜானரில் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தில் நடிகராக காமெடி நடிகரை தான் தேர்வு செய்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை நம்ம  பரோட்டா சூரி காமெடி நடிகர் தான், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க சூரி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார், அதேபோல் வெற்றிமாறன் பாலுமகேந்திராவின் உதவியாளர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் பாலு மகேந்திராவிற்கு எப்படி ஒரு முழு காமெடி படம் கிடைத்ததோ அதே போல் முழு காமெடி பட ஸ்கிரிப்டை வெற்றிமாறன் உருவாக்கியுள்ளார்.

அதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திற்கு பிறகு மிகப் பெரிய காமெடி திரைப்படம் ஒன்று இருக்கிறது என்பது தெரிகிறது இதை வெற்றிமாறன் ரசிகர்கள் ரசிப்பார்களா என்பதை படம் வெளியான பிறகுதான் தெரியும்.