தொடர்ந்து 5 படங்களை இயக்கும் வெற்றி மாறன் – யார் யார் உடன் கைக்கோர்க்க போகிறார் தெரியுமா.? சொன்ன நம்ப மாட்டிங்க.. முழு விவரம் இதோ.

சினிமாவுலகில் சைலண்டாக இருந்து கொண்டு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வெற்றி கொண்டுள்ளவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி அடைந்தோடு மட்டுமில்லாமல் வசூலில் வாரி குவித்து உள்ளன மேலும் இதுவரது திரைப்படங்கள் தோல்வியை தழுவியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இதுவரை இரண்டு தேசிய விருதுகளை அள்ளி உள்ளார். ஆடுகளம் மற்றும் அசுரன் படத்திற்காக விருதுகளை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் தற்பொழுது சூரியை ஹீரோவாக வைத்து “விடுதலை” என்னும் திரைப்படத்தை எடுத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து அசத்தியுள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தை முடித்துவிட்டு உடனேயே நடிகர் சூர்யாவுடன் கை கொடுத்து “வாடிவாசல்” திரைப்படத்தில் இருக்கிறார் இந்த திரைப்படமும் ஒரு நாவலை தழுவி இருக்கபோகிறதா படம் என கூறப்படுகிறது. சூர்யாவுடன் அந்த படத்தை முடித்துவிட்டுதான் அதன் பிறகு விஜய்யுடன் கை கைகோர்க்கிறார்.

ஏனென்றால் சமீபத்தில் வெற்றிமாறானே விஜயுடன் படம் பண்ணுவது உறுதி என கூறியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதனால் நிச்சயம் தளபதி விஜயுடன் அவர் பணம் பண்ண ரெடியாக இருக்கிறார். அடுத்தடுத்தாக உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார் அதுவும் கமலுக்கு பிடித்துப்போக அவரிடமும் ஒரு படம் பண்ணுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இப்படி அடுத்தடுத்த படங்களை இயக்கிய வெற்றிமாறன் ரெடியாக இருக்கிறார் போதாக்குறைக்கு தனுஷுடன் மீண்டும் ஒருமுறை இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெற்றிமாறன் நான்கைந்து படங்களில் கமிட்டாகி உள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Leave a Comment