வெற்றிமாறன் : போலீசை தாக்கும்படியான படங்கள் எடுப்பதற்கு இதுதான் காரணமாம்.? அவரே கூறிய பதில்

சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் வருடத்திற்கு இரண்டு, மூன்று படத்தை கொடுத்து வசூல் ரீதியாக வெற்றி பெறவே பார்க்கின்றனர்.  ஆனால் ஒரு சில இயக்குனர்களோ தான் இயக்கம் படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட வேண்டும், விருது வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தையே 10 மாதங்கள் அல்லது ஒரு வருடம்   எடுத்துக்கொள்கிறார்கள்.

அந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றால் கூட அடுத்த படத்தை உடனடியாக இயக்காமல் கதையை நன்கு ஆராய்ந்து அடுத்த படத்தை பொறுமையாக கையாண்டு வெற்றி படமாக கொடுக்கவே ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது சினிமா பயணத்தை பொல்லாதவன் படத்தின் போது ஆரம்பித்தாலும்,

தற்போதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் அவர் படங்களை எடுத்து இருக்கிறார் ஆனால் அந்த படங்கள் ஒவ்வொன்றுமே வெற்றி படங்கள் தான். கடைசியாக அசுரன் எடுத்தார். அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சு வெங்கடேசன் எழுதிய நாவலை தழுவி விடுதலை என்னும் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க காடு மலை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு உள்ளது இந்தப் படம்  மலைவாழ் மக்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் ஒரு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறாராம். படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்

படக்குழு திட்டமிட்டு உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக பெரும்பாலும் காவல்துறையை தாக்கும் படியான விஷயங்கள் வைக்கப்படுகிறது என கேள்வி கேட்டதற்கு பதில் அளித்தார்.

அதாவது குறிப்பாக காவல்துறையை மட்டும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று கூறினார் பொதுவாக மக்கள் மீது ஒரு அமைப்பின் ரீதியாக ஓடுக்கு முறைகள் நடத்தப்படுவது அதிகம் காவல்துறையினால் தான். ஆகையால் தான் இது போன்ற படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக வெற்றிமாறன் பேட்டியில் கூறினார்.

Leave a Comment