தரமான மூன்று திரைப்படங்களை கொடுக்கப் போகும் வெற்றிமாறன்.. 3 படங்களுமே சூப்பரா இருக்கே.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தற்பொழுது வரை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை பொதுவாகவே வெற்றிமாறன் திரைப்படத்தை எடுக்க நிறைய நாட்கள் தேவைப்படும் ஆனால் விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

மேலும் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு என்பதை வெற்றிமாறன் எப்பொழுதே கூறிவிட்டார் மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் இன்னும் ஒரு சில தரமான திரைப்படங்கள் உருவாக இருக்கிறது.

அதாவது விடுதலை 2 திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுதே ஆரம்பித்தாலும் இடையில் வெற்றி மாறன் விடுதலை படத்திற்காக வேலை செய்து வந்தார் ஆனால் தற்பொழுது விடுதலை 2 முடிந்த கையோடு வாடிவாசல் திரைப்படத்தை நிச்சயமாக இயக்கப் போகிறார் எனவும் தெரிகிறது.

மேலும் இந்தத் திரைப்படத்தை தொடர்ந்தும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வட சென்னை 2 திரைப்படத்தையும் எடுக்க இருக்கிறாராம் ஆம் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.குறிப்பாக வடசென்னை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து இருந்தது.

surya and vetrimaran
surya and vetrimaran

இதனை தொடர்ந்து வட சென்னை 2 திரைப்படம் வாடிவாசல் திரைப்படத்தை முடித்த கையோடு வெற்றிமாறன் இதிலும் களமிறங்க போகிறார் என ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.மேலும் இந்த தகவலை அறிந்து ரசிகர்கள் பலரும் வெற்றிமாறன் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை இயக்க இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment