தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் கதை சொல்லும் பாணியே மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படங்களும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் உடையதாக இருக்கும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பொல்லாதவனில் ஆரம்பித்து தற்போது அசுரனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மூன்று மாத திரைப்படம் ஆறுமாத திரைப்படம் ஒரு வருட திரைப்படம் என கணக்கு வழக்கு இல்லாமல் எதிர்காலம் நோக்கி காத்திருப்பது இவருடைய குணம்.
அந்தவகையில் இவர் இரண்டு வருடத்திற்கு ஒரு திரைப்படம் எடுப்பதே அரிதான விஷயம். இவ்வாறு தான் இயக்கும் திரைப்படங்களில் கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து பல்வேறு வெற்றிகளை கொடுத்து இருந்தாலும் தற்போது தான் இவர் தன்னுடைய சம்பளத்தை 7 கோடியாக தொட்டுள்ளார்.
அந்தவகையில் தான் இயக்கும் திரைப்படத்தில் தனக்கான சம்பளத்தை என்றுமே உயர்த்தி கேட்டதே கிடையாது. அந்தவகையில் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய தனித்துவமான திறமையின் மூலமாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு வெப் தொடர் ஒன்றும் இவருடைய கதையை வைத்து உருவாகி வருகிறது. இவ்வாறு இவை இரண்டும் முடிந்ததன் பிறகு சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.

அந்தவகையில் ஒரு திரைப்படத்திற்கு 6 கோடிகள் வரை சம்பளமாக வாங்கிய நமது இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கப் போகும் வாடிவாசல் திரைப்படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை 30 கோடியாக கேட்டுள்ளாராம்.