கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? அடடா இப்படி மிஸ்பண்ணிட்டாரே..

தமிழ் சினிமாவிற்கு பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக் கொண்டவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ்மேனன்.

இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தற்பொழுது நடிகராகவும் களத்தில் இறங்கி பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இத்திரைப்படம் கமலுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அவரது கேரியரில் அமைந்தது.

அந்தளவிற்கு கதை களம் விறுவிறுப்பாக சென்றதால் மக்களுக்கும் இத்திரைப்படம் பிடித்துப்போனது.

இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, ஜோதிகா மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே படத்தின் தயாரிப்பாளர் வேட்டையாடு விளையாடு படத்தைப்பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எதில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நாங்கள் சத்யராஜ்தான் அணுகினோம் ஆனால் அவருக்கு அந்த கதாபாத்திரத்தில் சற்று விருப்பம் இல்லாததால் அவருக்கு பதிலாக தான் பிரகாஷ்ராஜை நாங்கள் இந்த கதாபாத்திரத்திற்கு இறக்கினோம் என கூறினார்.

கமலுக்கு பிறகு இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment