வெந்து தனித்தது காடு படம் மாஸ்ஸா.. கிளாஸ்ஸா.. நடிகர் “சிம்பு” பதில்..!

simbu
simbu

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வி படங்கள் மற்றும் சினிமாவில் சரியாக நடிக்காமல் சில ஆண்டுகள் இருந்ததால் இருக்கின்ற இடமே தெரியாமல் போனார்.

இதனால் சிம்புவின் சினிமா பயணம் குலோஸ் என பலரும் கருதிய நிலையில் திடீரென உடல் எடையை குறைத்து புதிய அவதாரம் எடுத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார் அப்படி இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து வெந்து தனித்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதில் முதலாவதாக வெளிவரவுயுள்ள திரைப்படம் தான்  நடிகர் சிம்பு நடித்துள்ள  வெந்து தனித்தது காடு படம். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவனின் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav, kayadu lohar, siddhi idnani மற்றும் பலர் நடித்துள்ளனர். வெந்து தனித்தது காடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்,  டீசர் போன்றவை..

வெளிவந்த நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழா நடந்தது அதற்காக  சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி அசத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர். கௌதம் சார் என்னிடம் ஒரு கதையை சொன்னார் அது ஒரு காதல் கதை அதில் வித்தியாசமாக செய்யணும் அதில் 19 வயது பையனாக மாற வேண்டும்..

அதில் நிறைய விஷயங்கள் உள்ளது என கூறினார் நான் மாஸ் கிளாஸ் சொல்ல விரும்பல படம் எடுத்திருக்கோம் அது மாஸா.. கிளாஸா.. என மக்கள் தான் பார்த்து சொல்லணும் என பேசினார்.  தொகுப்பாளர் வெந்து தணிந்தது காடு மாஸா கிளாஸா என கேட்டுள்ளனர் அதற்கு பதில் தான் சிம்பு மேற்கொண்டவாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.