தர லோக்கலாக இறங்கிய சிம்பு வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் சமீபத்தில் தான்  ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் சொல்லுமளவிற்கு வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாகக் சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்.  வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சிம்பு அவர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்த படத்தில் சிம்புவுக்கு அம்மா வேடத்தில் ராதிகா அவர்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து சிம்பு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன.

இதன் பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது தற்போது  வெந்து தணிந்த காடு படத்தின்  புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

venthu thaninthathu kaadu

இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு புதுச்சேரியில் சில காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

Exit mobile version