10 வருடத்திற்கு பிறகு மீண்டும் பரோட்டா காமெடியில் கலக்கும் சூரி.! இதோ வெண்ணிலா கபடி குழு 2 காமெடி வீடியோ.!

0
Vennila Kabaddi Kuzhu 2
Vennila Kabaddi Kuzhu 2

Vennila Kabaddi Kuzhu 2 : சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் வெண்ணிலா கபடி குழு, இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், கிஷோர்,சூரி, சரண்யா அப்புக்குட்டி என பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, அதேபோல் விஷ்ணு விஷாலுக்கு தமிழ் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படம் தான்.

அது மட்டுமில்லாமல் சூரிக்கும் பரோட்டா சூரி  என பெயர் வந்ததும் இந்த திரைப்படத்தில் தான் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பரோட்டா காமெடி மிகவும் பிரபலமானது, வெண்ணிலா கபடிகுழு  திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்  இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷாலுக்கு பதில் விக்ராந்த் நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் சூரிக்கு பரோட்டா காமெடி இருந்தது போல் இத இரண்டாம் பாகத்திலும் பரோட்டா காமெடி இருக்கிறது சூரிக்கு, இந்த காமெடியும் ரசிகர்களிடம் பிரபலமடைந்து வருகிறது.