“மாநாடு” படம் சிம்பு – கான திரைப்படமே இல்லை மனதில் வேறு ஒரு ஹீரோவை வைத்து தான் வெங்கட்பிரபு எழுதியுள்ளாராம். யார் அது தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய வருவர் வெங்கட் பிரபு. இதுவரை இயக்குனராக இவர் பணியாற்றிய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியையே கண்டு உள்ளன. அந்த வகையில் சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம், மங்காத்தா இப்பொழுது சிம்புவை வைத்து மாநாடு என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து எஸ் ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன்,  எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது மேலும் படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த அசத்தியது சிம்பு கேரியரில் முதல் 100 கோடியைத் தொட்ட  படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் சூப்பர் தகவல் உலா வருகிறது அதாவது மாநாடு திரைப்படம் உண்மையில் சிம்புக்கான திரைப்படம் கிடையாதாம்.

இயக்குனர் வெங்கட்பிரபு நடிகர் ஜெய்யை மனதில் வைத்துதான் இந்த படத்தின் கதையையே உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் நடிகர் ஜெய் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு பிறகாக நடிகர் சிம்புவுக்கு கதையை கூறி இந்த படத்தில் கமிட்டானார்.

உண்மையில் சொல்லப்போனால் மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக்காக நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் அதனால் தான் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. ஒரு வேலை நடிகர் நடித்திருந்தால் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று என்பதே கேள்விக்குறி தான். நல்ல வேலை ஜெய் நடிக்கவில்லை சிம்புவின் நடித்ததால் தான் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டை தொட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment