மலேசியா டூ அம்னீஷியா பட நடிகர் வைபவ் குறித்து பேசிய வெங்கட் பிரபு.! படத்தை பார்த்து வேற என்ன சொன்னார் தெரியுமா.?

0

வைபவ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு வரும் படம்தான் மலேசியா டூ அம்னீஷியா. இந்த படத்தை ராதாகிருஷ்ணன் என்பவர் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் வைபவ் உடன் இணைந்து வாணி போஜன், எம்எஸ் பாஸ்கர், கருணாகரன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வைபவ் அவர்கள் தான் தயாரித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மன அழுத்தம் இருப்பவர்கள் இந்த படத்தை பார்த்தால் மன அழுத்தம் நிச்சயம் குறையும் அந்த அளவிற்கு காமெடியாகவும் எடுத்துள்ளனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் வைபவ் என் நண்பர் வெங்கட் பிரபு கூட என்னை வெகுவாக பாராட்டியது  இல்லை என கருணாகரனிடம் கூறுவார்.

இந்த படத்தை பார்த்த வெங்கட்வெங்கட்பிரபு இதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியது : இப்போது சொல்கிறேன் வைபவ் மலேசியா டூ அம்னீஷியா படம் செம பன்  ரைடு உனக்கு ட்ரெய்லர் மேட் கேரக்டர் ராதாமோகன் எழுதியிருக்கிறார்.

படகுழுவினருக்கு  இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் zee5 வில் படத்தை பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகரும் தம்பியுமான பிரேம்ஜி இந்த திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ வெங்கட் பிரபு பதிவு ட்வீட்டை நீங்களே பாருங்கள்.