அடுத்த ஆட்டத்தை தொடங்கிய வெங்கட் பிரபு.! இதோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

0
venkat-prabhu
venkat-prabhu

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகா சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாக சைதன்யா நடித்துவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே பட குழு அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே அறிவித்தது போல இந்த போஸ்டர் வெளியான உடனே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு படக்குழு கஸ்டடி என்ற டைட்டில் வைத்துள்ளனர் இந்த படத்தில் நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

custody
custody

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தற்போது ஒரு தகவல் இனையத்தில் வைரளாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து இந்த படத்தில் நாக சைதன்யா உடன் இணைந்து கீர்த்தி செட்டி நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.